அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

19
0
Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.

ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொள்ளவதற்காக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.

அதிலிருந்து 40 நாட்கள் தொடர்ந்து மோதல்கள் நீடித்த நிலையில், அவற்றுக்குத் தற்காலிக இடைவேளை வழங்கும் வகையில் பாகிஸ்தானின் தலையீட்டுடன் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரண்டு வார கால போர்நிறுத்தம் தற்போது அமுலில் உள்ளது.

இந்த யுத்தம் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here