சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

14
0
Spread the love

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுங்க நடவடிக்கை ஒன்றின் போது, சுங்க அதிகாரிகளினால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன நாட்டு வியாபாரி என்பதுடன், அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 26,100 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சுங்க அதிகாரிகளின் முறையான சோதனையின் போது கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here