இன்றும் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

69
0
Spread the love

புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் (12) விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக ​பேருந்துகளை ஈடுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்காக மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here