ஒரே நாளில் நீரில் மூழ்கி யாழ் இளைஞர்கள் இருவர் பலி

45
0
Spread the love

இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் நேற்று (19) இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவரும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மற்றுமொருவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here