தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி

154
0
Spread the love

தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 5000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தவார இறுதியில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (21.10) 24 கரட் தங்கம் பவுன் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here