மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட பன்னைவெட்டுவான் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மன்னார் மடுப்பகுதியைச் சேர்ந்த தர்மராசா சிவகுமார் வயது (48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (22.04) புதன்கிழமை காலை தனது கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்ற பொழுதே குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் ஊர் மக்கள் அவரை மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதன் போது மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.






