தமிழக சட்டமன்ற தேர்தலில் 84 சதவீத வாக்குப் பதிவு

38
0
Spread the love

தமிழக சட்டப் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது.

234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தும் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலுக்காக தமிழ் நாட்டில் 4.82 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலை விட 19 இலட்சம் பேர் இந்த தேர்தலில் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 73.63 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை வாக்களிப்பில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் அடிப்படையில்,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.43 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பதிவான வாக்குச்சதவீதம் – 73.62 சதவீதம் என்பதுடன், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் 81.51 சதவீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here