மன்னாரில் பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை

89
0
Spread the love

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்  நானாட்டன் முருங்கன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கத்தி முனையில் தங்கநகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளையில், பின்பக்க வேலியால் உள் நுழைந்த முகமூடித் திருடன் குறித்த ஆசிரியை கத்தியைக் காட்டி மிரட்டி  கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ள 2-1/2.பவுண் தங்கச் சங்கிலியின் பெறுமதி சுமார் 7 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம்  தொடர்பில்  முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here