லக்னொவை சூப்பர் ஓவரில் வீழ்த்திய கொல்கத்தா

39
0
Spread the love

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 38 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிக்கொண்டுள்ளது.

நேற்று (26.04) இடம்பெற்ற 38வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னொவ் சூப்பர் ஜயன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னொவ் சூப்பர் ஜயன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரிங்கு சிங் 83 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இந்நிலையில் 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய லக்னொவ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில் முதலில் துடுப்பாடிய லக்னொவ் அணி ஒரு ஓட்டத்திற்குள் 2 விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் 2 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங் 4 ஓட்டங்களை விளாசி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here