உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 5,000 மெற்றிக் தொன் அரிசி அரசு நிறுவனங்கள் மூலமாகவும், மீதமுள்ளவை சந்தைத் தேவைகளின் அடிப்படையில் தனியார் துறை மூலம் இறக்குமதி செய்யப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.







