பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து 

17
0
Spread the love

பொகவந்தலவையில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை (28.04) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்க விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழினுட்ப கோளாறு காரணமாக, பேருந்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாரதி  வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அததெரண‌ செய்தி வெளியிட்டுப்பட்டுள்ளது.

மேலும் வித்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here