போதைப்பொருள் தொடர்பில் 100,000 க்கும் மேற்பட்டோர் கைது

7
0
Spread the love

நாடே ஒன்றாக” எனும் தேசிய நடவடிக்கையின் கீழ், கடந்த 6 மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட 289 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடைய 163,197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2,719 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2025 அக்டோபர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,932 கிலோகிராம் ஹெரோயின், 1,985 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 271 கிலோகிராம் கொக்கெய்ன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கஞ்சா, கஞ்சா செடிகள், குஷ், ஹஷீஷ், போதை மாத்திரைகள், மதநமோதகம் மற்றும் மாவா ஆகியவையும் இந்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here