நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக மீன்பிடிப் படகு- 10 மீனவர்கள் மீட்பு

34
0
Spread the love

கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில், அதில் இருந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், மீட்கப்பட்ட மீனவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here