மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

7
0
Spread the love

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (03) முதல் வரும் 06-ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதி ஊடாக கொழும்பிற்கு வருகை தரவுள்ளார்.

அந்த நேரத்தில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here