விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

51
0
Spread the love

பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட  இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள்  மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், முற்பகல் 11 மணியளவில் தவெகவின் விஜய் 108 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதிகமுக 71 இடங்களையும், ஸ்டாலின் தலைமையிலான திமுக 56 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு,  வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here