தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 08 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2 ம் இடத்திலும், திமுக 3 ம் இடத்திலும் இருக்கின்றன.
முன்னிலை நிலவரம் @ தமிழகம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
புதுச்சேரி முன்னிலை நிலவரம் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.






