மன்னாரில் மலசல கூட குழிக்குள் ஆணின் சடலம் மீட்பு 

19
0
Spread the love

மன்னார் மூர் வீதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறை குழிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுளளது.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (04.05) திங்கட்கிழமை குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிசார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

அருள் சேயா ரொனீஸ்ரன் ரெவல் (38) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கடந்த இரண்டாம் திகதி கொலை செய்யப்பட்டு துண்டாடப்பட்டு வீட்டின் மலசலக் கூட குழிக்குள் வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உறவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை யுண்ட நபரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here