திருமணப் பேச்சுக்கு மத்தியில் பிரேக்கப் தகவல்… அனுபமா – த்ருவ் விக்ரம் ஜோடிக்கு என்னாச்சு?

8
0
Spread the love

திரையுலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பின்னர் பிரிவதும் புதிதல்ல. அந்த வகையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் த்ருவ் விக்ரம் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து த்ருவ் விக்ரமை அன்ஃபாலோ செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன்’ திரைப்படத்தில் த்ருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர், இருவரும் ஒன்றாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியதால், அவர்களது காதல் குறித்த தகவல்கள் மேலும் வலுப்பெற்றன.

இதற்கிடையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை இனிமேல் செய்வேன் என்றும், அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு த்ருவ் விக்ரமை மறைமுகமாக குறிப்பிட்டே வெளியிடப்பட்டதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், அனுபமா பரமேஸ்வரன் அல்லது த்ருவ் விக்ரம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

இதனால், இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களா அல்லது இது வெறும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here