கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் போதைப் பொருள் தடுப்பு திட்டத்திற்கு அமைவாக மன்னார் 54 வது காலாட்படை பிரிவினர் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது கடந்த (05.05) செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலை மற்றும் சிலாவத்துறை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தனித்தனியாக நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முசலி பாடசாலையில் ஆசிரியர் மாணவர்கள் உள்ளடங்களாக 220 பேரும் சிலாவத்துறை பாடசாலையில் ஆசிரியர் மாணவர்கள் உள்ளடங்களாக 100 பேரும் பங்கேற்றுள்ளனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, 542 காலாட்படை பிரிகேட்டின் தளபதி கேர்னல் LWB ரிடிமஹலியத்த மற்றும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் கே. செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையகத்தின் சிரேஷ்ர விரிவுரையாளரும் உளவியல் ஆலோசகருமான திருமதி ஏ. சாமினி வைலட் வளவாளராக கலந்து கொண்டு செயலமர்வினை நடத்தினார்.
54ஆவது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலில் 542 காலாட்படை பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் WAND ஜயசுந்தரவின் மேற்பார்வையில் குறித்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது







