மன்னாரில் இன்று அதிகாலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து சிலாவத்துறை சவேரியார்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட 1200 கிலோகிராம் மஞ்சள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,
அதனை கடத்த தயாராக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகளையும் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







