மாபெரும் ஹஜ் பெருநாள் விழா கொண்டாட்டம் எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அல்ஹாஜ் நூர்தீன் மசூர் அவர்களின் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 16ஆவது ஹஜ் பெருநாள் விழாவில், மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட உலகெங்கிலும் வாழும் மக்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







