அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட A/Horapola Muslim Vidyalaya பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழா அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDC) செயலாளர் O.M. அஷ்ரப் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவரும் சட்ட முதுமானியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவை முன்னிட்டு ஊர் மக்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமான ஊர்வலமும் நடைபவனியும் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
மேலும், பாடசாலையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களும் பழைய மாணவர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
அத்தோடு பாடசாலையின் பழைய மாணவி ரிப்னா ஆசிரியையினால் தொகுக்கப்பட்ட பாடசாலையின் வரலாறு அடங்கிய சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்பட்டது
75 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இப்பவள விழா, பாடசாலையின் பெருமைமிகு வரலாறு, ஒற்றுமை மற்றும் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
பாத்திமா சனோபர்







