சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

9
0
Spread the love

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இரண்டாம் வருட இளைஞர் மற்றும் அபிவிருத்தி பாடநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” கடந்த (04.06) அன்று நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தொப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம். இர்ஷாட் கௌரவ அதிதியாகவும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி பாடசாலையின் பணிப்பாளர் வி.ஜெயரூபன் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேலும்,ரமீஷா எச்.கான், கலிந்து ரத்நாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

நிகழ்வின் வளவாளராக வை.எம்.நிம்ஷாத் கலந்து கொண்டு, சமூக ஊடக அடிமைத்தனத்தினால் மாணவர்களின் கல்வி, மனநலம் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் உரையாற்றினார்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான பொறுப்புணர்வை வளர்க்க உதவி புரிவதுடன், அதன் எதிர்மறை விளைவுகள் குறித்த தெளிவான புரிதலையும் ஏற்படுத்திய ஒரு பயனுள்ள செயலமர்வாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here