அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
சித்தாண்டி சந்தியில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடந்து அரசாங்கம் ஏமாற்றிவருவதாக
மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார்.
மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக் குளங்களை அமைத்துத் தருவதாகவும், பாதைகளைச் சீரமைத்துத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், இன்றுவரை எந்தவொரு பணியும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.







