வட மாகாண பாடசாலைகளின் விளையாட்டு துறை அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

54
0
Spread the love

வட மாகாண பாடசாலைகளின் விளையாட்டுத் துறை அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக,
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில், வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக மொத்தம் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்திற்கென
வவுனியா மாவட்டத்திலிருந்து
கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
நெடுங்கேணி மகா வித்தியாலயம்
தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
செட்டிகுளம் மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும்

மன்னார் மாவட்டத்திலிருந்து
புனித சவேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம்
புனித அன்னாள் கல்லூரி
அடம்பன் மத்திய மகா வித்தியாலயம்
பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து
வித்தியானந்தா கல்லூரி
பாரதி மகா வித்தியாலயம்
பாலிநகர் மகா வித்தியாலயம்
முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களிடையே பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக இந் நிதியானது
விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here