துப்பாக்கி மாயமான சம்பவம் – பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

6
0
Spread the love

 

தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி தனது கடமைக்காகப் பொறுப்பேற்ற கைத்துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாக, நேற்று (27) சீதாவக்கபுர கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்க கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்து வருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here