நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிறைச்சாலையில் இரு குழுக்கள் இடையே இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர்.







