காணாமல் போன OIC யின் துப்பாக்கி பாலத்திற்கு அருகில் கண்டுபிடிப்பு

39
0
Spread the love

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் காணாமல் போன உத்தியோகபூர்வ துப்பாக்கி, யட்டியந்தோட்டை பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பொலிஸ் கடற்படை பிரிவு முத்துக்குளிப்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here