மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026 விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,தொடக்க நிகழ்வாக மன்னார் மாவட்டச் செயலகம், நானாட்டான் பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பீட் நிஜாகரன்,மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காய்வாளர், அனர்த்த முகாமைத்துவ உதவி மாவட்டப் பணிப்பாளர் கே.திலீபன், மன்னார் பிரதேச செயலாளர் கே.காந்தீபன் மனோன்மணி அறக்கட்டளை நிதியத்தின் பொருளாளர் ஜே. அன்ரனி,அந்நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கிஷோர்,வைத்திய கலாநிதி ஒஸ்மன்டெனி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்யானந்தன்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஜே.எஸ்.பி. லெம்பேட்,மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜெஸ்மின்,மாவட்ட வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் எஸ். ரெக்ஸ் அருள்நேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகளின் பிரதான அனுசரணையை மனோன்மணி அறக்கட்டளை நிதியம் வழங்கியுள்ளது.அதற்கான அனுசரணைக் காசோலையை அறக்கட்டளையின் பொருளாளர் ஜே. அன்ரனி,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரனிடம் நிகழ்வின் போது கையளித்தார்.
மாவட்ட அரச நிறுவனங்களுக்கிடையே ஒற்றுமை, விளையாட்டுணர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.






