சுற்றுலாப் பயணிகளின் வருகை 12 இலட்சத்தை அண்மித்து

82
0
Spread the love

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதி அமைச்சர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை இலங்கையினால் ஈட்ட முடிந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான வளர்ச்சியை அடுத்து, 2026 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்படும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்றும் இணை அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here