யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை – நுகர்வோருக்கு எச்சரிக்கை

9
0
Spread the love

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுமார் 30 கிலோகிராம் மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நேற்று (31) இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நான்கு வியாபாரிகளிடமிருந்து சுமார் 30 கிலோகிராம் வரையான பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் அவை அனைத்தும் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மீன் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் அதன் புத்துணர்ச்சி மற்றும் தரம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here