டெங்கு அபாயம் – மாணவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர அனுமதி

44
0
Spread the love

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடையுடன் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 60 டெங்கு அதிக அபாய வலயங்களை உள்ளடக்கி, நாளை (13) முதல் விசேட ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை ஐ கடந்துள்ளதுடன்
டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here