கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் உள்ள கமநல சேவை நிலையத்தினால் கடந்த 2025 ஆம் ஆண்டு “பிடியளவு கமநிலத்திற்கு“ தேசிய வேலை திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சர் கே. டி. லால்காந்த பங்குபற்றுதலுடன் நடுகை செய்யப்பட்ட 600 தென்னம்பிள்ளைகள் காணாமல் போயுள்ளதுடன் தென்னங்கன்றுகள் நடுகைசெய்யப்பட்ட நிலம் சிறுவர்களின் விளையாட்டு திடலாக மாறியுள்ளது.
இந்த தேசிய வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது தென்னைப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தென்னை அபிவிருத்தி சபையிடமிருந்து 600 தென்னம் பிள்ளைகளை பெற்று கமநலசேவை நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட தனியொரு பயனாளிக்கு 225 தென்னைகளும் இரண்டு பயனாளிகளுக்கு தலா 150 தென்னைகள் வீதமும் மூன்று பயனாளிகளுக்கு தலா 20 பிள்ளைகளும் ஒரு பயனாளிக்கு 15 தென்னைகளும் என 600 பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு தரிசான நிலங்களை துப்புரவு செய்து நிலக்கடலை உற்பத்தி செய்வதற்காக நிலக்கடலை மற்றும் நடுகை இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.







