வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land & Development) பாலசிங்கம் தேவரதன்இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர், அவர் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (Deputy Commissioner) நீண்டகாலம் கடமையாற்றி, அப்பகுதியின் விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற எளிமையான கடமையேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மேலதிக அரசாங்க அதிபருக்குத் தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல அபிவிருத்தித் துறையில் இவருக்கு இருக்கும் பரந்த அனுபவம், வவுனியா மாவட்டத்தின் காணிப் பயன்பாடு மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை மேலும் திறம்பட முன்னோக்கி நகர்த்த பெரிதும் உதவும் என மாவட்ட செயலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.






