நேற்றைய தினம் (10.06) செவ்வாய்க்கிழமை பொசன் போயா தினத்தை முன்னிட்டு, தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில்,மன்னார் ஆயர் மேதகு, ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொண்டதோடு, சர்வமதத் தலைவர்கள்,மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், மற்றும் அரச உத்தியோகத்தர்கள், முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.
குறித்த புனித பொசன் போயாதினத்தில், புத்தபெருமானின் சிறப்பம்சங்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பெருமளவான மக்கள் இந்நிகழ்வில்,ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.மேலும்
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தினரால் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் புத்தபெருமானின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் கீதங்கள் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வருடமும் பொசன் போயா நிகழ்வுகள் 54 வது காலாட்படை பிரிவில் இவ்வாறு சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.























