உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு

25
0
Spread the love

கிளிநொச்சி, முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் உறவினரான 18 வயது இளைஞர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை எடுக்க முற்பட்டபோது, அதன் பெட்டியில் நின்றுகொண்டிருந்த சிறுவன் தவறி கீழே விழுந்துள்ளார் . இதன்போது உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .ரதிஸ்குமார் டாருசன் என்ற மூன்றரை வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here