கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்

14
0
Spread the love

செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு வைத்தியசாலைப் பணிப்பாளர் மகேந்திரன் தயாளினி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா தூதுவர் இசபெல் மார்ட்டின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த இயந்திரங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here