அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடுகள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை நீதிமன்ற விசாரணைகளின் ஊடாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால், இலங்கை வரலாற்றில் தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அவர் மாறுவார் என்றும் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.
அத்தகைய தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் நடவடிக்கைகளில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்







