காரைநகர் வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கரையொதுங்கல்
யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று (24) கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்குச் சென்றவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கரையொதுங்கிய சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







