நேபாளம்–சீனா எல்லையில் பேரழிவு வெள்ளம். 1,400-க்கும் மேற்பட்டோர் மாயம்

30
0
Spread the love

நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்களும் இதில் சிக்கியுள்ளனர். நேபாளத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திபெத் பகுதியில் 260-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா மற்றும் யாத்திரைக்குச் சென்றவர்களில் சிலரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், வெள்ளத்தால் உருவாகியுள்ள புதிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அவை உடைந்து மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நேபாளம் மற்றும் சீனா எச்சரித்துள்ளன. இதனால் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here