14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை

25
0
Spread the love

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவருக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிரியான இளைஞனை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டுத் தொகையை வழங்கத் தவறினால், மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here