சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு ரூ.20 இலட்சம் வீட்டு உதவி!

41
0
Spread the love

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட நிலையில் சமூகமயப்படுத்தப்படும் இளைஞர், யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் வாழும் சிறுவர்களுக்கும் வீடுகளை அமைப்பதற்காக ரூ.20 இலட்சம் நிதியுதவி வழங்கும் “வாழ்விற்கு பலம்” வீட்டு உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள ஒவ்வொரு பிள்ளையின் பெயரிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.5,000 சேமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக ரூ.10 இலட்சம் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்தத் தொகை ரூ.20 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 8,000 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் வசித்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here