சேந்தான்குளத்தில் இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது

50
0
Spread the love

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்று (19)சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் ஒருவர் படகில் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த இளவாலை பொலிஸ் குழுவினர், கடலாமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிலோவுக்கும் அதிக எடையுடைய இரண்டு கடலாமைகளும், அவற்றை கரைக்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கடலாமைகள் இரண்டும் இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here