யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

49
0
Spread the love

பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடமையின் நிமித்தம் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தனங்கிளப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த கால்வாயில் வீழ்ந்ததில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னார், அடம்பன் பகுதியைச் சேர்ந்த எமிலியான் அன்ரனி (வயது 30) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here