யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நான்கு சிறுவர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் வெளியாகிய காணொளியில் இடம்பெறும் உத்தியோகத்தர் குறித்த சீர்திருத்தப் பள்ளியில் கடமையாற்றி வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







