நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் நாளை மறுதினம்

266
0
Spread the love

மன்னார் மாவட்டத்தின் பிரசித்திபெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சதல ராஜகோபுரத்திற்கான மகா கும்பாபிஷேகம் கடந்த 17.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் 24 நாட்கள் மண்டலாபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மண்டலாபிஷேகத்தின் இறுதி நாளான எதிர்வரும் 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை, சாலம்பன் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

அத்துடன், 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அம்பிகையின் அடியவர்கள் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here