சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகர தொட்டவத்த நியமனம்

31
0
Spread the love

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சந்திரசேகர தொட்டவத்த, சுதந்திர ஊடக இயக்கத்தின் (FMM) புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர ஊடக இயக்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், அமைப்பின் இரு அறங்காவலர்களின் இணக்கத்துடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆசிரியரும் அனுபவம் வாய்ந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான சந்திரசேகர தொட்டவத்த, இலங்கையின் ஊடகத்துறைக்கு நீண்டகாலப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இதற்கு முன்னரும் அவர் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், சுதந்திர ஊடக இயக்கத்தின் தொழிற்சங்கத்தின் (FMMTU) பொதுச் செயலாளராகவும் அவர் பணியாற்றவுள்ளார்.

முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பதவி விலகியதைத் தொடர்ந்து, பதில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் திலிஷா அபேசுந்தர, தொடர்ந்து செயலாளர் பதவியில் பணியாற்றுவார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here