ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவை மீண்டும் ஆரம்பம்!

75
0
Spread the love

புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையை ஐந்து மாவட்டச் செயலகங்கள் ஊடாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் குறித்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டச் செயலகங்கள் ஊடாகப் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

முன்னதாக, இந்தச் சேவை குறித்த மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வந்தது. எனினும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இதனால், குறித்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆஇந்நிலையில் பஸ், மாவட்டச் செயலகங்கள் ஊடாகப் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம், பொதுமக்கள் எதிர்நோக்கிய போக்குவரத்துச் சிரமங்களும் கால விரயமும் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here