ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் பிக்குகளின் சத்தியாக்கிரகம் நான்காவது நாளாகத் தொடர்ச்சி!

13
0
Spread the love

கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 16ஆம் திகதியன்று பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் குழுவினர் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர். அன்றைய தினம் அங்கு தற்காலிக மேடை அமைக்க முற்பட்டபோது பொலிசாருக்கும் பிக்குகளுக்கும் இடையே சிறு உரசல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஞானசார தேரர் முழுமையாக விடுவிக்கப்படும் வரை அவ்விடத்தை விட்டு நகர்வதில்லை என்பதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உறுதியாக உள்ளனர்.

இதற்கு முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குறித்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவர்கள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்து தங்களது தொடர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here