ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் போலி மொபைல் செயலிகள்

15
0
Spread the love

தேசிய விமானச் சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போலியான நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வட்ஸ்அப் மற்றும் பல்வேறு சமூக ஊடகக் குழுக்களின் வாயிலாகச் சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள் (Links) பகிரப்பட்டு, விமானப் பயணச்சீட்டுகளைக் குறைந்த விலையில் முன்பதிவு செய்யலாம் எனக்கூறி பணப் பரிமாற்றங்கள் தூண்டப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான போலியான குறுஞ்செய்திகள் அல்லது போலியான மொபைல் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் ஈடுபட வேண்டாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வங்கி அட்டைகளின் இரகசிய எண்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP) மற்றும் தனிப்பட்ட வங்கிச் தரவுகளை அடையாளம் தெரியாத நபர்களுடனோ அல்லது இணையதளங்களிலோ பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செயலியைப் பதிவிறக்குவதற்கு ஆப்பிள் அப் ஸ்டோர் (Apple App Store) அல்லது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை மட்டுமே நாட வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here